கந்தசாமி, ஆளவந்தான் கோயில் சொத்துக்கள் அபகரிப்பு! மீட்டு அறிக்கை தாக்கல் செய்ய அதிரடி உத்தரவு!
By : Thangavelu
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தான் ஆகிய கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை உடனடியாக மீட்டு அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்தி சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தான் கோயிலின் சொத்துக்களை மறு உத்தரவு வரும் வரை யாருக்கும் பத்திரப்பதிவு செய்து வைக்கக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் கூறிய அறநிலையத்துறை, ஏப்ரல் 13ம் தேதிக்குள் அபகரித்த சொத்துக்கள் மீட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில்கள் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் இதே நிலைமைதான் நீடிக்கிறது. சொத்துக்களை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொள்வது இல்லை என்றால் கோயிலுக்கு செல்ல வேண்டிய வருவாயை ஆக்கிரமிப்பாளர்களே வைத்துக்கொள்வது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Puthiyathalaimurai
Image Courtesy: The Indian Express