Kathir News
Begin typing your search above and press return to search.

வழக்கறிஞர்களுக்கு புது உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்.!

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக 500க்கும் குறைவான தொற்று பாதித்தவர்கள் இருந்தனர். இதனால் பல்வேறு வகையான தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது.

வழக்கறிஞர்களுக்கு புது உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்.!

ThangaveluBy : Thangavelu

  |  6 March 2021 1:20 PM GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக 500க்கும் குறைவான தொற்று பாதித்தவர்கள் இருந்தனர். இதனால் பல்வேறு வகையான தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது.

இதனால் பொதுமக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர். முன்பு இருந்த மாதிரி தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இயங்கி வருகிறது. மக்கள் தினமும் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் என அனைவரும் பிஸியாகவே உள்ளனர்.

ஆனால் பொது இடங்களில் முக கவசம் அணிவது குறைந்து வருவதால் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா தாக்கம் மறுபடியும் உயர்ந்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி மார்ச் 8ம் தேதி முதல் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை உயர்நீதி மன்ற பதிவாளர் கூறியுள்ளார்.

மேலும், மற்ற வழக்கறிஞர்கள் ஆன்லைன் வாயிலாக ஆஜராக முடியும் என கூறப்பட்டுள்ளது. அதே சமயங்களில் வழக்கறிஞர்கள் அறைகள் மூடப்படுவதால் நாளைக்குள் அனைத்து ஆவணங்களையும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News