பதிவு எண் இல்லாமல் இயங்கும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை.. உயர்நீதிமன்றம் உத்தரவு.!
சென்னை மாநகராட்சியில் குப்பைகளை அகற்றுவதற்கு பதிவு எண் மற்றும் காப்பீடு இல்லாத பேட்டரி ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அது போன்ற வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By : Thangavelu

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் குப்பைகளை அகற்றுவதற்கு பேட்டரி ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதே போன்று சென்னை நகரில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேட்டரி ஆட்டோக்கள், தனியார் ஒப்பந்தம் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முறையாக பதிவு மற்றும் காப்பீடு இல்லாமல் ஓடும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சி மற்றும் காவல் ஆணையருக்கும் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.