Kathir News
Begin typing your search above and press return to search.

புராதன சின்னமாக கருதப்படும் கோயிலில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி பெறப்பட்டதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட இடமாக கருதப்படும் இடத்தில் கட்டமானங்கள் மேற்கொள்வதற்கு உரிய அனுமதி பெறப்பட்டதா? என விளக்கம் அளிக்க மத்திய தொல்லியல் துறைக்கும், தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புராதன சின்னமாக கருதப்படும் கோயிலில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி பெறப்பட்டதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
X

ThangaveluBy : Thangavelu

  |  9 Feb 2022 4:35 AM GMT

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட இடமாக கருதப்படும் இடத்தில் கட்டமானங்கள் மேற்கொள்வதற்கு உரிய அனுமதி பெறப்பட்டதா? என விளக்கம் அளிக்க மத்திய தொல்லியல் துறைக்கும், தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த கங்கைகொண்ட சோழபுரம் கோயில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு கட்டுமானங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதற்கு தடை விதிக்கக் கோரி பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. கட்டுமானங்கள் மேற்கொள்வது தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் படி விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு தொல்லியல் துறை எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது புராதன சின்னத்தில் இருந்து எவ்வளவு தூரங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் கட்டுமானம் மேற்கொள்வதற்கு உரிய அனுமதி பெறப்பட்டதா என்பது பற்றியும் தமிழக இந்து சமய அறநிலையத்துறையும், மத்திய தொல்லியல் துறையும் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Source: Thanthi Tv

Image Courtesy: Samayam Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News