உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசு பணியாளர்கள்! தி.மு.க.விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய உயர்நீதிமன்றம்!
ஊரக உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By : Thangavelu
ஊரக உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விடுப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக, உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலை ஒரே கட்டமாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாகவும் நியமனம் செய்ய வேண்டும் என அதிமுக தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 24) விசாரணைக்கு வந்தது.
அப்போது நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அது மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யக்கோரிய அதிமுகவின் மனுவை பரிசீலனை செய்து செப்டம்பர் 29ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவால் திமுக அரசு அதிர்ச்சியடைந்துள்ளது என்றே சொல்லலாம். ஆளும் கட்சி என்பதால் அரசு ஊழியர்கள் அனைவரும் திமுக கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார்கள். அதே சமயம் அதிமுக கூட்டணியில் உள்ள வேட்பாளர்களுக்கு போலீஸ் மற்றும் தேர்தல் அலுவலர்களால் நெருக்கடி அளிக்கவும் வாய்ப்பு இருப்பதாக அதிமுக கருதியது. இதன் காரணமாகவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamalar