Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் இனிமேல் யூக்கலிப்டஸ் மரங்கள் நடக்கூடாது - தி.மு.க. அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் இனிமேல் யூக்கலிப்டஸ் மரங்கள் நடக்கூடாது - தி.மு.க. அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ThangaveluBy : Thangavelu

  |  26 July 2022 8:35 AM GMT

தமிழகத்தில் இனிமேல் யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்து.

தற்போது தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் அந்நிய மரங்களை அகற்றுவது பற்றிய வழக்குகள் நீதிபதிகள் முன்பாக விசராணைக்கு வந்தது. அப்போது வனப்பகுதிகளில் இருக்கின்ற அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிக்கையாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி 10 ஆண்டுக்குள் தமிழக வனப்பகுதிகளில் உள்ள அனைத்து அந்நிய மரங்களும் அகற்றப்படும் எனவும் இதற்கு என்று மாவட்ட அளவிலான குழுக்கள் அமைத்திருப்பதாக விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும், மரங்களை அகற்றுவதற்கான பணிகளை செய்வதற்கு தேவையான நிதி ஜப்பான சர்வதேச கூட்டுறவு முகவர் மற்றும் கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத்துக்கான தேசிய வங்கி உள்ளிட்டோரிடம் பெறுவதற்கு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை ஆய்வு செய்த நீதிபதிகள் வனங்களை காப்பது தொடர்பான அறிக்கைகளை மட்டுமே தாக்கல் செய்யும் தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபடவில்லை என அதிருப்தி அடைந்திருப்பதாக நீதிபதிகள் கூறினர். மரத்தை அகற்றுவதற்கு 10 ஆண்டுகள் காத்திருக்க முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து கூறினர். மேலும், அந்நிய மரங்களை அகற்றுவதற்கான பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் விரைவாக முடிக்க முடியும் என்ற அறிவுரைகளையும் தமிழக அரசுக்கு வழங்கிய நிலையில் இனி வரும் காலங்களில் யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News