Kathir News
Begin typing your search above and press return to search.

நீர்நிலைகளில் தாஜ்மஹாலே கட்டியிருந்தாலும் இடிக்கப்படும்.. சென்னை உயர்நீதிமன்றம்.!

இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் தென்னக ரயில்வே 3 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

நீர்நிலைகளில் தாஜ்மஹாலே கட்டியிருந்தாலும் இடிக்கப்படும்.. சென்னை உயர்நீதிமன்றம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  1 July 2021 12:05 PM IST

நீர்நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மஹாலே கட்டியிருந்தாலும் இடித்து தள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.டி.ஆறுமுகம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ரயில்வே நடைபாதை கட்டப்படுகிறது. எனவே இந்த கட்டுமானத்துக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.





மனுதாரர் தரப்பில் இருந்து ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், இந்த ரயில்வே நடைபாதைக்காக இரண்டு நீர்நிலைகள் அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதனிடையே ரயில்வே தரப்பில் இருந்து ஆஜரான வழக்கறிஞர் பி.டி.ராம்குமார், நடைபாதை கட்டுமான பணிகள் முடிவடைந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மஹாலே கட்டியிருந்தாலும் இடிக்கப்படும். வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானது என்றாலும் அவை இயற்கையை பாதிக்கும் வகையில் இருக்ககூடாது. குறிப்பாக நீர் வளங்களை பாதிப்பதாக இருக்கக்கூடாது.

இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் தென்னக ரயில்வே 3 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News