நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் ! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒருவாரம் கெடு!
நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாகவும், அது பற்றிய ஆவணங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

By : Thangavelu
நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாகவும், அது பற்றிய ஆவணங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் பருவமழை பெய்யும்போது நகரங்களில் தண்ணீர் வெளியேற முடியால் பல்வேறு வீடுகளை சூழ்ந்திருப்பதையும் காண முடிகிறது. அது போன்று தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்புகளை பொதுமக்கள் சந்திதுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று (டிசம்பர் 1) விசாரணைக்கு வந்தபோது, மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றியது பற்றி ஒரு வாரத்தில் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிட நேரிடும் என தமிழக அரசுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால் இந்த வழக்கில் ஒரு வாரத்திற்குள் எத்தனை நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது என்பன விவரங்கள் தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Kumudham
Image Courtesy:The Hindu
