Kathir News
Begin typing your search above and press return to search.

"அர்ச்சகர் பணிநியமனங்கள் உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது "- உயர்நீதிமன்றம் அதிரடி !

அர்ச்சகர் பணிநியமனங்கள் உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது - உயர்நீதிமன்றம் அதிரடி   !
X

DhivakarBy : Dhivakar

  |  23 Oct 2021 12:55 PM GMT

"அர்ச்சகர்கள் பணி நியமனங்கள் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது" என கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறையின் புதியவிதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள் 2020ஆம்ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த விதி : 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் மற்றும் மூன்று ஆண்டு அர்ச்சகர் பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும்

இந்த வரையறுக்கப்பட்ட விதி பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பை சந்தித்தது.

முதல் எதிர்ப்பு , அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் முத்துகுமார் மற்றும் சென்னை சி.ஐ.டி., நகரை சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் எனபவரும் இந்த புதிய விதியை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.பெரம்பலூர் மாவட்ட சிறுவாச்சூரிலுள்ள மதுரகாளியம்மன் கோவில் பரம்பரை பூசாரிகள் உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் டிஆர்.ரமேஷ் என்பவரும் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

"பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது என்றும் பரம்பரை அறங்காவலர்களால் தான் அர்ச்சகர்கள் நியமிக்க முடியும் என்று தெரிவித்தார். மேலும் 28க்கும் மேற்பட்ட ஆகம விதிகள் உள்ளது. அந்த ஆகம விதிகளுக்கு உட்பட்டே பணி நியமனம் செய்யப்படவேண்டும் என்றும் ஆகம விதிகளை மீறி அர்ச்சகர்களை நியமிக்க இடைக்கால தடை விதிக்கவேண்டும்" என்று மனுதாரர் தரப்பு வழங்கறிஞர் வாதாடினார்.

தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், ஆனால் அர்ச்சகர் பணிநியமனங்கள் உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டுள்ளனர். வழக்கு குறித்து தமிழக அரசு நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News