Kathir News
Begin typing your search above and press return to search.

கடல் அலைகளில் இருந்து மின்சாரம்: சென்னை IITயின் புதிய கருவி!

கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பது குறித்து சென்னை ஐ.ஐ.டியின் புதிய கருவிக்கு மத்திய அமைச்சர்களின் சார்பில் பாராட்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கடல் அலைகளில் இருந்து மின்சாரம்: சென்னை IITயின் புதிய கருவி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Dec 2022 1:59 PM GMT

கடல் அலை இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள். அவர்களுக்கு தற்போது பாராட்டுகளும் குவிந்து வருகிறது. குறிப்பாக மத்திய அமைச்சகத்தின் புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமைந்திருப்பதன் காரணமாக மத்திய அமைச்சர்களும் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள்.


கடல் அலைலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஓசன் எனர்ஜி கன்வெர்ட்டர் என்று கருவியை சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள். இந்த கருவில் கடந்த நவம்பர் மாதம் வெற்றிகரமாக நிறைவு செய்தது. அதைத் தொடர்ந்து தூத்துக்குடி கடற்கரையில் இருந்த காரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் 20 மீட்டர் ஆழத்தில் கருவி தற்போது நிறுவப்பட்டு இருக்கிறது.


இதன் மூலம் கடந்த அடுத்த மூன்று ஆண்டுகளில் கடலில் இருந்து சுமார் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த கருவி குறிப்பிட்டதக்க ஆற்றல் உற்பத்தி உள்ளிட்ட காலநிலை மாற்றம் தொடர்பாக பல்வேறு இலக்குகளை அடைய உதவும் என்று கூறப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆகியோரும் இந்த கருவியின் தற்போது பாராட்டு இருக்கிறார்கள். சென்னை ஐ.ஐ.டியின் இந்த ஒரு புதிய கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. இவர்களுடைய தொடர் முயற்சிக்கும் தன்னுடைய பாராட்டுக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News