Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் பயங்கரம்! ஓடும் அரசு பேருந்தில் தீ விபத்து! அலறியடித்து வெளியேறிய பயணிகள் !

திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பயங்கரம்! ஓடும் அரசு பேருந்தில் தீ விபத்து! அலறியடித்து வெளியேறிய பயணிகள் !
X

ThangaveluBy : Thangavelu

  |  29 Sept 2021 1:29 PM IST

திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கோயம்பேடு அருகே இன்று காலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தின் இன்ஜினில் இருந்து திடீரென்று கரும்புகை வந்துள்ளது. இதனை உணர்ந்த ஓட்டுநர் உடனடியாக பயணிகள் அனைவரையும் இறங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து பயணிகள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியேறியுள்ளார். ஒரு சில நிமிடங்களில் தீ மளமளவென்று பரவியது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். பேருந்து முற்றிலும் சேதமடைந்தது. பயணிகளின் உயிர்களை காப்பாற்றிய ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Source, Image Courtesy: Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News