அரசியல்வாதிகள், அதிகாரிகளின் துணையோடு காணாமல் போகும் பாலேரிப்பட்டு ஏரி!
By : Thangavelu
சென்னையில் நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களின் அட்டூழியத்தால் ஆவடி மாநகராட்சியில் அமைந்துள்ள பாலேரிப்பட்டு ஏரி முற்றிலும் காணாமல் போகும் நிலையில் உள்ளது.
அரசியல்வாதிகள், மற்றும் அதிகாரிகளின் ஆசியுடன் தினந்தோறும் ஆக்கிரமிப்புகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது ஆவடி 46வது வார்டில் உள்ள பாலேரிப்பட்டு கிராமத்தில் சுமார் 76 ஏக்கரில் பாலேரிப்பட்டு ஏரி அமைந்துள்ளது. அங்கு மழை பெய்யும் சமயங்களில் ஏரி நிரம்பும் தருவாயில் 0.14 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.
இந்த தண்ணீரால் நிலத்தடி நீர் மட்டும் உயருவதால் விவசாயத்திற்கும் பெருமளவில் உதவியது. ஆனால் தற்போது தனியார் ஆக்கிரமிப்பு பகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் முளைத்துள்ளது. அங்கு மின்சாரம் மற்றும் அடிப்படை வசதிகள் வருவாய்த்துறை வாயிலாக கிடைத்துள்ளது. இது போன்ற பிரச்சனையால் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் குறைந்துவிட்டது. இது பற்றி மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் எவ்வித பயனும் இல்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar