Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை: அனல் பறக்கும் பேச்சாளர்களுடன் 75வது சுதந்திர ஆண்டு பெருவிழா கொண்டாட்டம்!

வருகின்ற மார்ச் 26, 27 இரண்டு நாட்களில் அனல் பறக்கும் பேச்சாளர்களுடன் 75வது சுதந்திர ஆண்டு பெருவிழா கொண்டாட்டம்.

சென்னை: அனல் பறக்கும் பேச்சாளர்களுடன் 75வது சுதந்திர ஆண்டு பெருவிழா கொண்டாட்டம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 March 2022 1:24 AM GMT

இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு கொண்டாட்டத்தில் நாம் இந்த வருடம் இருக்கிறோம். அதை சிறப்பிக்கும் வகையில் Indoi Analytics சார்பில் ஏற்பாடு செய்த சென்னை இரண்டாம் ஆண்டு இலக்கிய விழாவின் ஒரு பகுதியாக தற்பொழுது 75வது சுதந்திர ஆண்டு பெருவிழா கொண்டாட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கொண்டாட்டத்தில் அனல் பறக்கும் தமிழ் பேச்சாளர்களும் இடம்பெறும் உள்ளார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி வருகின்ற மார்ச் 26 மற்றும் 27 ஆகிய நாட்களிலும் நடைபெற உள்ளது. தமிழ் இலக்கியம் மீதும் மற்றும் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.


மேலும் அதைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள இதை ஒரு வாய்ப்பாகும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் அந்த வகையில் இங்கு உரையாற்றிய இருக்கும் அனைத்து பேச்சாளர்களும் இலக்கிய முதல் சுதந்திரம் வரை பல்வேறு வகையான தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள். மேலும் இந்த விழாவை ஏற்பாடு செய்த Indoi Analytics அமைப்பின் முக்கிய நோக்கம் என்னவென்றால், இந்தியா முழுவதும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து பொது மக்கள், பெருநிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவது. அவற்றில் ஒரு முயற்சியாக இந்த விழா அமையவுள்ளது. இரண்டு நாட்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிகழ்ச்சியின் பேச்சாளர்கள் தங்களுடைய தலைப்புகளில் அனல்பறக்க பேச உள்ளார்கள்.


நிகழ்ச்சியின் தொடக்க நாள் அதாவது முதல் நாளான மார்ச் 26 அன்று, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் நிகழ்ச்சியின் துவக்க உரை வழங்க உள்ளார். மேலும் அவரை தொடர்ந்து சாகித்ய அகாடமி விருதாளர் மற்றும் எழுத்தாளருமான ஸ்ரீ. சோ. தர்மர் அவர்கள் எனது இலக்கியப் படைப்புகளும் சூழலியல் பார்வை என்ற தலைப்புகளில் உரையாற்ற உள்ளார். டாக்டர் கௌரி, VC சென்னைப் பல்கலைக்கழகம் அவர்கள் சுதந்திரப் போராட்ட காலத்தை ஆவணப் படுத்துதல்-தற்கால சரித்திர இலக்கிய புரிதல் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். திரைப்பட நடிகர் ஸ்ரீ கனல் கண்ணன் அவர்கள் மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் குதிராம் போஸ் அவர்கள் பற்றிய தகவல் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். இதி ஹாஸ் சங்கடன் யோஜனா தலைவர் டாக்டர். சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், சுதந்திரப் போராட்டத்தை ஆவணப்படுத்தல்- தற்கால சரித்திர இலக்கிய புரிதல் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். இந்திய பார் கவுன்சில் முன்னாள் தலைவர் ஸ்ரீ கார்வேந்தன் அவர்கள், சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் சட்ட அமைப்பு என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். பா.பிரபாகரன் அவர்கள், திராவிடம், தமிழ் மற்றும் இந்திய தேசியம் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். காலையில் 9.30 மணி அளவில் துவங்கும் இந்த நிகழ்ச்சி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதைப்போல் இரண்டாம் நாள் நிகழ்ச்சியிலும் பேச்சாளர்கள் கலந்து கொண்டு, பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாற்றி நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளார்கள்.

Input & Image courtesy: www.Indoianalytics.in

Next Story
கதிர் தொகுப்பு
Trending News