Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை மெட்ரோ ரயிலில் 34 ஆயிரம் பேர் பயணம்.!

கொரோனா பெருந்தொற்று காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக மெட்ரோ ரயில் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது.

சென்னை மெட்ரோ ரயிலில் 34 ஆயிரம் பேர் பயணம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 Jun 2021 5:23 PM IST

சென்னை மெட்ரோ ரயில் சேவை கடந்த ஒரு மாதமாக செயல்படாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. காலை மற்றும் மாலை நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு சேவையும் மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு சேவையும் அளிக்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக மெட்ரோ ரயில் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது.




இதனிடையே கொரோனா தொற்று குறைந்த நிலையில், சென்னையில் மீண்டும் சேவையை தொடங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தொடர்ந்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

குறைந்த அளவில் மக்கள் பயணம் செய்வதை காணமுடிகிறது. அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகளவு பயணம் மேற்கொள்கின்றனர். அதன்படி முதல் நாளில் 29 ஆயிரம் பேர் பயணித்தனர். நேற்று முதல் இந்த எண்ணிக்கை 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இன்றும் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News