சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில் : சதாப்தியைவிட 30 நிமிடம் சூப்பர் பாஸ்ட்!

By : Kathir Webdesk
வந்தே பாரத் ரயில்கள்
நாடு முழுவதும் அதிநவீன வசதிகளுடன் கூடிய 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 5வது வந்தே பாரத் ரயில் சேவை சென்னை-மைசூர் இடையே தொடங்கப்படுகிறது. சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில், கர்நாடக மாநிலம் பெங்களூரு வழியாக மைசூரை அடையும். இந்த ரயிலைத் தயாரிக்கும் பணி சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் நடைபெற்று வருகிறது. இதுவே தென்னிந்தியாவின் முதலாவது வந்தே பாரத் ரயிலாகும்.
முன்கூட்டியே சென்றடையும்
சென்னை-மைசூரு வந்தே பாரத் ரயில் புதன்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். 504 கி.மீட்டர் தொலைவை, மணிக்கு 75.6 கி.மீ. வேகத்தில், 6 மணி நேரம் 40 நிமிடத்தில் வந்தே பாரத் ரயில் கடக்கிறது. சாதாப்தி யிலைக் காட்டிலும் பெங்களூருக்கு 20 நிமிடம் முன்பாகவும், மைசூருக்கு சதாப்தி ரயிலைக் காட்டிலும் 30 நிமிடம் முன்பாகவும் மட்டுமே சென்றடைகிறது.
ஏன் வேகம் குறைவு?
வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகம் வரை செல்லும். ஆனால் சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் அருகருகே அமைந்துள்ள லெவல் கிராசிங்குகள், ரயில் வழித்தடங்களை ஒட்டி பல இடங்களில் தடுப்புச் சுவர் கட்டப்படாமல் இருப்பது, நகரப் பகுதிகள் அதிகம் இருப்பது போன்ற காரணங்களால், மணிக்கு 75.6 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Input From: Hindu
