கொரோனா வார்டுக்கு சென்று நலம் விசாரித்த சென்னை போலீஸ் கமிஷ்னர்.!
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போலீஸ் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் கொரோனா வார்டில் நேரடியாக சென்று நலம் விசாரித்தார்.
By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போலீஸ் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் கொரோனா வார்டில் நேரடியாக சென்று நலம் விசாரித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது. இதன் பாதிப்புகள் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்குகளை போலீசார் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். அது போன்ற சமயங்களில் போலீஸ் மற்றும் அவரது குடும்பத்தினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போலீஸ் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்று தனியாக கொரோனா சிறப்பு வார்டு செயல்பட்டு வருகிறது. அங்கு 82 போலீசார் சிகிச்சை பெற்று வரும் அவர்களை சென்னை போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
அவர்களுக்கு பழம் மற்றும் சத்தான உணவுப்பொருட்களை வழங்கினார். இந்த புகைப்படங்கள் போலீஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.