முழு ஊரடங்கை மீறி வியாபாரம்.. கோவையில் பிரபல துணிக்கடைக்கு சீல்.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வணிக வளாகங்கள் மற்றும் மால்கள், பெரிய கடைகளை திறக்கக்கூடாது என அரசு உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
By : Thangavelu
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வணிக வளாகங்கள் மற்றும் மால்கள், பெரிய கடைகளை திறக்கக்கூடாது என அரசு உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே கோவை ஒப்பணக்கார வீதியில் கொரோனா விதிமுறையை மீறி செயல்பட்ட பிரபல ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கோவை மாவட்டத்தில், பொதுமுடக்கம் காலத்தில் துணிக்கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை செயல்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வரும் பிரபல ஜவுளிக்கடையின் பின்புறமாக விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சிக்கு தகவல் கிடைத்தது. தகவலை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சென்று பார்வையிட்டனர். அப்போது சென்னை சில்க்ஸ் ஜவுளிக் கடையில் பின்புறம் வியாபாரம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், முழு ஊரடங்கில் கடையை திறந்து வியாபாரம் செய்த குற்றத்திற்காக, உடனடியாக கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். பிரபல ஜவுளி நிறுவனத்திற்கு சீல் வைத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.