சென்னையில் 300 இடங்களில் வடியாத வெள்ளம் !
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25ம் தேதி முதல் தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே போன்று சென்னையில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் சுமார் 300க்கும் மேற்பட்ட தெருக்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
By : Thangavelu

இந்நிலையில், சென்னையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னையில் கடந்த 10ம் தேதி முதல் கனமழை பெய்தது. அன்றைய இரவு மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமானது சென்னை கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இதனால் சுமார் 30 மணி நேரத்திற்கும் இடைவிடாமல் மழை பெய்தது.
சென்னை தெருக்களில் காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக இருந்தது. இதனால் சுமார் 513 தெருக்கள் வெள்ளநீரில் மூழ்கியது. அந்த தெருக்களில் குடியிருந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெள்ளத்தில் தவிக்க நேரிட்டது. மழை வெள்ளம் அதிகமாக ஓடிய தெருக்களில் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், தண்ணீர் தேங்கிய 500க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை (நவம்பர் 12) சுமார் 125 இடங்களில் தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் அப்புறப்பத்தினர். மீதமுள்ள 300 இடங்களில் மழைநீர் அகற்றுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Source: Maalaimalar
Image Courtesy:The Indian Express