கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: சென்னையில் இரண்டு நாட்கள் போக்குவரத்து மாற்றம்!
By : Thangavelu
கபாலீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு சென்னையில் மார்ச் 15, 16 ஆகிய நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டும் தோறும் பங்குனி பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி கீழ்கண்ட இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
அதன்படி வருகின்ற 15.03.2022 தேர் திருவிழா அன்று காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் 1.03.2022 அன்றை நாட்கள் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் கோயிலை நோக்கி செல்வதற்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி லஸ் சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை, புனிதமேரி சாலை முதல் ஆர்.கே.மடம் சாலையில் தெற்கு மாட வீதி நோக்கி, கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு மற்றும் சிபி கோயில் தெரு, மாங்கொல்லை தெரு, நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெரு கிழக்கு மாட வீதி, கிழக்கு சித்ர குளம் தெருவிலிருந்து வடக்கு சித்ரகுளம் தெரு லஸ் சந்திப்பை அடைந்து அடையாறு மற்றும் மந்தை வெளியை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் லஸ் சர்ச் ரோடு, லஸ் அவின்யு மற்றும் செயின்ட் மேரிஸ் ரோடு உள்ளிட்டவை அடைந்து செல்ல வேண்டிய இலக்கை நோக்கி செல்லலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: News 18 Tamil