சென்னை வந்தடைந்தார் தலைமை தேர்தல் ஆணையர்.!
சென்னை வந்தடைந்தார் தலைமை தேர்தல் ஆணையர்.!
By : Kathir Webdesk
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட பணிகளை முடித்துள்ளது. புதிய வாக்காளர் பெயர் பட்டியல் தயாரித்தல் மற்றும் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் 15வது சட்டசபையின் பதவிக்காலம் வருகின்ற மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையொட்டி மீண்டும் தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர், 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளனர். இக்குழுவில் தேர்தல் கமிஷனர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார், பொதுச்செயலாளர் உமேஷ் சின்கா, துணை தேர்தல் கமிஷனர் சந்திரபுஷன்குமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆணையம் தமிழகத்தில் எப்போது தேர்தல் நடத்தலாம், கொரோனா காலக்கட்டத்தில் தேர்தல் நடைபெறுவதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன ஆலோசிக்கப்படலாம். மேலும் தேர்தல் தேதியும் இந்த மாதம் இறுதிக்குள் அறிவிக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.