Kathir News
Begin typing your search above and press return to search.

புயலால் இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்.!

புயலால் இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்.!

புயலால் இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Dec 2020 3:08 PM GMT

நிவர் மற்றும் புரெவி புயல் தமிழகத்தை மிரட்டி வருகிறது. இந்த புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பலத்த சூறாவளி காற்று வீசுவதாலும் குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.


இதனால் பொதுமக்கள் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், புரெவி புயலால் ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்க்கிறது. இந்த கனமழை காரணமாக விவசாயிகள் வளர்த்து வந்த கால்நடைகள் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளது. மேலும் தண்ணீரில் அடித்தும் செல்லப்பட்டுள்ளது.


விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகள் இறப்பதை தாங்கி கொள்ள முடியாமல் விவசாயிகள் கண்ணீர் விட்டு அழும் காட்சிகளை காண முடிகிறது.


இந்நிலையில், புயலால் இறந்த கால்நடைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் உதவி அறிவித்துள்ளார். அதன்படி இறந்த ஒரு மாட்டுக்கு ரூ.30,000, எருதுக்கு ரூ.25,000, கன்றுக்கு ரூ.16,000, ஆடுகளுக்கு ரூ.3,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று புயலால் சேதமடைந்த வீடுகளுக்கும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News