Kathir News
Begin typing your search above and press return to search.

அமீருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவி.. அப்படி என்ன அது.!

அமீருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவி.. அப்படி என்ன அது.!

அமீருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவி.. அப்படி என்ன அது.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jan 2021 5:51 PM GMT

இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் நாற்காலி, ‘மூன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில், வி.இசட்.துரை இயக்கியுள்ளார். அமீருக்கு ஜோடியாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.

நாற்காலி படத்தில் இடம்பெற்றுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற வரிகளில் தொடங்கும் பாடலை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104-வது பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 16-ம் தேதி மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக்கொள்கிறார். இத்திரைப்படத்தை வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

முதலமைச்சர் அமீர் நடித்த படத்தின் பாடலை வெளியிடுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அமீர் திமுக பக்கம் ஆதரவாக பேசுபவர், ஆனால் தற்போது அவரின் பாடலை வெளியிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் பாடலை வெளியிடுவதால் அப்படத்திற்கு அதிமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News