Kathir News
Begin typing your search above and press return to search.

‘முதல்வன்’ பட பாணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை.!

‘முதல்வன்’ பட பாணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை.!

‘முதல்வன்’ பட பாணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை.!
X

Pradeep GBy : Pradeep G

  |  11 Nov 2020 4:29 PM GMT

சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, வேலை கேட்டு மனு அளித்த மாற்று திறனாளி பெண்ணுக்கு 2 மணி நேரத்தில் சுகாதாரத்துறையில் பணி வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மின்னல் வேக நடவடிக்கை எடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரீஸ்வரி 28, இவர் மாற்று திறனாளி பெண் ஆவார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய மருத்துவ உபகரணங்களை வழங்கினார். அதன் பின்னர் மருத்துவமனையை விட்டு சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கார் வந்த போது, சாலை ஓரத்தில் கையில் மனுவுடன் மாரீஸ்வரி பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த முதல்வர் மாரீஸ்வரியிடத்தில் விசாரித்தார். அப்போது, மாரீஸ்வரி தனக்கு அரசு வேலை வேண்டி விண்ணப்பம் ஒன்றை முதல்வரிடத்தில் மனு அளிக்க வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மனுவை பெற்று கொண்ட முதல்வர், 2 மணி நேரத்திற்குள் சுகாதார துறை மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கணினி பிரிவில் பணி வழங்க நடவடிக்கை எடுத்தார். உடனடியாக பணிய நியமன ஆணையும் மாரீஸ்வரிக்கு வழங்கினார்.

மனு கொடுத்த 2 மணி நேரத்தில் பணி ஆணையை பெற்ற மாரீஸ்வரி கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இதனை கண்ட அதிமுக தொண்டர்கள் முதல்வன் பட பாணியில் எடப்பாடி பழனிசாமி உதவியுள்ளார் என்று கூறினார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News