Kathir News
Begin typing your search above and press return to search.

காவிரி- வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.!

காவிரி- வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.!

காவிரி- வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Feb 2021 10:57 AM GMT

100 ஆண்டுகால விவசாயிகளின் கோரிக்கை தற்போது நிறைவேற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்தூரில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவரி- தெற்கு வெள்ளாறு- வைகை- குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு முதல் கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெறுகிறது.

இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.3,384 கோடி மதிப்பில் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைப்பக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த விழாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். காவிரி ஆற்றில் வருடத்திற்கு இரண்டு முறை வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அந்த சமயங்களில் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதனை கருத்தில் கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக அப்பகுதி மக்களின் 100 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.

இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், க.பாஸ்கரன், எஸ்.வளர்மதி மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படுவதால், கரூர், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். வறட்சியான பகுதிகளிலும் இனிமேல் விவசாயம் செய்ய முடியும் என்று நம்புகின்றனர். அனைவரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News