டிரோன் உதவியுடன் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையை திறந்த முதலமைச்சர்.!
டிரோன் உதவியுடன் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையை திறந்த முதலமைச்சர்.!
By : Kathir Webdesk
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய நினைவிடத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதன் பின்னர் அவர் வாழ்ந்து வந்த போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றியது.
இதனையடுத்து இன்று (28ம் தேதி) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேதா இல்லத்தை திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் உடனிருந்தனர். இந்நிலையில், மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் ஜெயலலிதாவின் 9 அடி முழு உருவ சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் கே.பி. அன்பழகன் முன்னிலையில் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டது.
ஜெயலலிதா சிலை மீது போர்த்தப்பட்டிருந்த பச்சை நிற போர்வையை முதலமைச்சர் ட்ரோன் மூலம் அகற்றி திறந்து வைத்தார். அது மட்டுமின்றி டிரோனை பயன்படுத்தி சிலை மீது மலரும் தூவப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.