Kathir News
Begin typing your search above and press return to search.

கோவையில் நிமோனியா காயச்சலால்தான் குழந்தை இறந்தது.. சுகாதாரத்துறை தகவல்.!

கோவையில் நிமோனியா காயச்சலால்தான் குழந்தை இறந்தது.. சுகாதாரத்துறை தகவல்.!

கோவையில் நிமோனியா காயச்சலால்தான் குழந்தை இறந்தது.. சுகாதாரத்துறை தகவல்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Feb 2021 4:22 PM GMT

கோவை மாவட்டம், மசகாளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் மற்றும் விஜயலட்சுமி, இவர்களின் 3 மாத ஆண் குழந்தை இன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விதமான கருத்துக்கள் பரவியது.குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உயிரிழந்து விட்டது என ஒரு சில ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டு வந்தது. இச்சம்பவம் கோவை மாவட்டம் மட்டுமின்ற மாநிலம் முழுவதும் ஒருவிதமான அச்ச உணர்வு மக்கள் மனதில் எழுந்தது.

இந்நிலையில், நிமோனியா நோய்த் தொற்றால் தான் குழந்தை உயிரிழந்துள்ளது என்று சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தடுப்பூசி போடப்பட்ட 14 குழந்தைகளில் 13 குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றன எனவும் விளக்கம் அளித்துள்ளது.

பொய்யான தகவல்களை பரப்பி மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்துபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News