குழந்தை திருமணங்களை தடுக்க தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை.!
சாதிப்பற்று மற்றும் மூடநம்பிக்கையால் குழந்தை திருமணங்கள் அதிரகித்து வருகின்றன. தமிழக போன்ற பல்வேறு காரணங்களால்தான் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கின்றன. எனவே தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
By : Thangavelu

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எந்த ஒரு பேரிடரின்போதும் அதற்குப்பின்னரும் பெரும் தாக்கங்களை எதிர்கொள்கிறவர்கள் இளம் சிறார்கள். குறிப்பாக, பெண் குழந்தைகள். எளிதாக கல்வி இடைநிற்றல், பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் திருமணங்கள் என ஆளாகிவிடுகிறார்கள். கொரோனா ஊரடங்கில் தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகமாக சேலம், தர்மபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக நடைபெறுகின்றன. இதுவரை 318 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.