Kathir News
Begin typing your search above and press return to search.

போலி குழந்தைகள் நல காப்பகம் : குழந்தைகளை கட்டிட வேலைக்கு அனுப்பும் அரசு பள்ளி ஆசிரியர் !

போலி குழந்தைகள் நல காப்பகம் : குழந்தைகளை கட்டிட வேலைக்கு அனுப்பும் அரசு பள்ளி ஆசிரியர் !

DhivakarBy : Dhivakar

  |  24 Oct 2021 3:46 AM GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் நல காப்பகம் நடத்தி வருவதற்காக கூறி, அக்குழந்தைகளை கட்டிட வேலைக்கும் வயல் வேலைக்கும் அனுப்பியதாக அரசு பள்ளி ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கலைமகள் என்பவர் குடுமியான்மலை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர். அவரது கணவர் ராஜேந்திரன் இருவரும் சேர்ந்து ஆதரவற்ற குழந்தைகள் நல காப்பகம் நடத்தி வருகின்றனர். அந்த காப்பகத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கின்றன. அக்குழந்தைகளை கட்டிட வேலைகளுக்கும் வயல் வேலைகளுக்கும், பயன்படுத்தியதாகவும், மற்றும் குழந்தைகளுக்கு முறையாக சரிவர உணவு வழங்காமல் துன்புறுத்துவதாக புகார்கள் எழுந்து வந்தன.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காப்பகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது. காப்பகம் நடத்துவதாக கூறி வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்று மோசடி செய்து வந்தது அம்பலமானது. காப்பகத்தின் உண்மை முகம் அறிந்த அதிகாரிகள் குழந்தைகளை மீட்டு வேறொரு காப்பகத்தில் சேர்த்தனர்.

Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News