விழுப்புரம்: சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு.!
கிராம மக்கள் உதவியுடன் கல்லைச் சுற்றிலும் இருந்த மண் அகற்றப்பட்டது. அந்த பலகைக் கல்லின் ஒரு பக்கத்தில் மூத்ததேவி சிற்பமும் இன்னொரு பக்கத்தில் கல்வெட்டும் பொறிக்கப்பட்டு உள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

By : Thangavelu
விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள கொட்டப்பாக்கம் வேலி என்ற கிராமத்தில், எழுத்தாளர் செங்குட்டுவன், சரவணகுமார் உள்ளிட்டோர் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மண்ணில் புதைந்த நிலையில் பலகைக் கல் இருந்துள்ளது. இது மதகு வீரன் அல்லது மதுரை வீரன் என்று அப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வந்துள்ளது.
கிராம மக்கள் உதவியுடன் கல்லைச் சுற்றிலும் இருந்த மண் அகற்றப்பட்டது. அந்த பலகைக் கல்லின் ஒரு பக்கத்தில் மூத்ததேவி சிற்பமும் இன்னொரு பக்கத்தில் கல்வெட்டும் பொறிக்கப்பட்டு உள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது: சுமார் 5 அடி உயரமுள்ள அந்தப் பலகையின் கல்லின் ஒரு பகுதியில் மூத்ததேவியின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. இதன் காலம் கி.பி.8ம் நூற்றாண்டாகும். பல்லவர் காலத்தில் மூத்ததேவி வழிபாடு இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.