திருச்சி: பெரியார் சிலை அருகில் 150 அடி உயரத்தில் தேவர் சிலை! முக்குலத்தோர் சங்கங்கள் அதிரடி முடிவு!
திருச்சியில் பெரியாருக்கு 135 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் வழங்கியிருந்தார்.
By : Thangavelu
திருச்சியில் பெரியாருக்கு 135 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் வழங்கியிருந்தார்.
இந்நிலையில், பெரியார் சிலை அமைய இருக்கும் அதே திருச்சியில் 150 அடி உயரத்தில் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று முக்குலத்தோர் அமைப்புகள் முடிவு செய்துள்ளது. இது பற்றி அனைத்து முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த தலைவர்களை நேரடியாக சந்தித்து பேசி வருகிறார் தென்னிந்திய பார்வார்ட் பிளாக் கட்சி நிறுவன தலைவர் திருமாறன் ஜி.
இது தொடர்பாக திருமாறன் கூறியதாவது: இந்தியாவின் சுதந்திர தினம் கருப்பு தினம் என்றும் தொடர்ந்து ஆங்கிலேயனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர் ஈ.வெ.ராமசாமி ஆவார். மேலும், சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுடன் இணைந்து ஆங்கிலேயனுக்கு எதிராக சுதந்திர போராட்டதத்ல் ஈடுபட்டவர் பசும்போன் தேவர். எனவே அவருக்கு திருச்சியில் அமைய உள்ள பெரியார் சிலையை விட உயரமாக சிலை அமைக்கப்படும்.
மேலும், 150 அடி உயரத்தில் பசும்போன் தேவர் சிலை அமைகின்ற வளாகத்தில் நூலகம், பொழுது போக்கு பூங்கா, பசும்பொன் தேவர் பற்றிய அருங்காட்சியம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம் பெறும் என்றார். இதற்காக அனைத்து முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த தலைவர்ளை நேரில் சந்தித்தும் பேசி வருகிறேன் என்றார்.
மேலும், இதற்காக திருச்சியில் தேவர் சிலை அமைகின்ற இடத்தை தேர்வு செய்யும் பணிக்காக இந்த வாரத்தில் திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்த பின்னர் இடத்தை தேர்வு செய்யும் வேலையில் இருப்பதாக கூறினார்.
Source, Image Courtesy: Dinavasal