சட்ட விரோத ஜெபக்கூட கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிகாரிகள் அப்புறப்படுத்தவில்லையா?
By : Kathir Webdesk
சட்டவிரோதமாக கட்டிய ஜெபக்கூட கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், ஜெபக்கூடத்திற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்க முயற்சி செய்ததாக தகவல் வெளியானதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக பொது இடங்களில் பொது மக்களை ஈர்க்கும் வகையில், சட்டவிரோத மதமாற்ற கும்பல் ஜெபக் கூடங்களை எழுப்பி வருவது வழக்கமாகி வருகிறது. இதற்க்கு அப்பகுதி அரசு அதிகாரிகளும் ஆதிரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தொப்பம்பாளையம் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஜெபக் கூடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கடந்த மாதத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை பொருட்படுத்தாமல் அப்பகுதி அரசு அதிகாரிகள் ஜெபக்கூடத்திற்கு அனுமதி அளிக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அரசு அதிகாரிகளை கண்டித்து இந்து முன்னணி சாலை மறியலில் ஈடுபட்டது இது குறித்து இந்து முன்னணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
ஈரோடு மாவட்டம் தொப்பம்பாளையத்தில் சட்டவிரோத ஜெபக்கூடத்தை இடித்து அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.ஆனால் இன்னும் நடைபெறவில்லை.அரசு அதிகாரிகள் அனுமதி கொடுக்க முயற்சி செய்ததை கண்டித்து இந்துமுன்னணி சாலைமறியல்.