Kathir News
Begin typing your search above and press return to search.

கபாலீஸ்வரர் கோவிலில் கிறிஸ்துவ ஊழியர் - அம்பலமாகும் அறநிலையத்துறை அட்ராசிட்டீஸ்!

கபாலீஸ்வரர் கோவிலில் கிறிஸ்துவ திருமணம் நடைபெற்றதா?சர்ச்சையில் சிக்கிய கோவில் நிர்வாகம்.

கபாலீஸ்வரர் கோவிலில் கிறிஸ்துவ ஊழியர் - அம்பலமாகும் அறநிலையத்துறை அட்ராசிட்டீஸ்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Nov 2022 3:52 AM GMT

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்து மதத்தை சாராத ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததாக சர்ச்சை எழும்பு இருக்கிறது. இது குறித்து ஹிந்து முன்னணி சென்னை மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறுகையில், மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் அப்புசாமி என்பவரின் திருமணம் நவம்பர் 7ஆம் தேதி நடப்பதாக பத்திரிக்கையில் பார்த்தேன்.. மேலும் அதை நாளில் மாலை 6 மணிக்கு ரிசப்ஷன் அருகில் இருக்கின்ற சர்ச்சில் நடைபெறுவதாக போடப்பட்டிருந்தது அந்த பத்திரிக்கையில் அவர் பார்த்ததாக கூறப்படுகிறது.


அந்த பத்திரிகையில் மணமகனின் பெயர் அப்பு ராஜா என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் மணமகனின் பெற்றோர் பெயர் அந்தோணி ராஜ், அல்போன்ஸ் போன்ற கிறிஸ்தவ பெயர்கள் அந்த பத்திரிகையில் இடம் பெற்று இருந்தது. எனவே இந்து மதத்தை சேராத ஒருவர் எப்படி இந்து கோவிலில் திருமணத்தை செய்து கொள்ள முடியும் என்று கேள்வி எனக்குள் தோன்றியது. அதன் பெயரில் அவரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தோம். அவர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வாக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.


மேலும் அவர் தி.மு.க மயிலை பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்து இருக்கிறது. இதுகுறித்து இந்த சமய அறநிலையத்துறை அதிகாரிக்கு கடிதம் ஒன்றில் எழுதி வருகின்றார். பிறகு இந்து அல்லாதவர் இந்து கோவிலில் திருமணம் செய்ய தகுதி அற்றவர். எனவே அதன் பெயரில் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக அவருடைய திருமணம் கோவிலில் நடைபெறவில்லை, அருகில் இருந்த மண்டபத்தில் நடைபெற்றது இதில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

Input & Image courtesy:Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News