Kathir News
Begin typing your search above and press return to search.

ஹவாலா முறையில் 6 ஆயிரம் கோடி பணம் வெளிநாடுகளில் பெற்ற கிருஸ்தவ மிஷனரி அமைப்பு.!

ஹவாலா முறையில் 6 ஆயிரம் கோடி பணம் வெளிநாடுகளில் பெற்ற கிருஸ்தவ மிஷனரி அமைப்பு.!

ஹவாலா முறையில் 6 ஆயிரம் கோடி பணம் வெளிநாடுகளில் பெற்ற கிருஸ்தவ மிஷனரி அமைப்பு.!

Mohan RajBy : Mohan Raj

  |  7 Nov 2020 9:35 AM GMT

கிருஸ்தவ மிஷனரி அமைப்புகள் மதமாற்றம் செய்ய சட்ட விரோதமாக பணம் பெற்று வருவதும் அதனை அரசு கண்காணிப்பதும் சமீபகாலமாக அதிகமாக உள்ளது. இதனால் தான் மத்தியில் ஆளும் மோடி அரசை முறைகேடாக பணம் பெறும் கிருஸ்துவ அமைப்புகள் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில் வருடத்திற்கு 1000 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடாக வெளிநாடுகளில் பணம் பெற்று வந்த ஓர் கிருஸ்தவ அமைப்பு தற்பொழுது விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளது.

பிலிவர்ஸ் ஈஸ்டர்ன் என்ற சர்ச்சுக்கு (Believer’s Eastern Church) சொந்தமான 66 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். தமிழகத்தில் மூன்று இடங்களில் இரண்டாவது நாளாகச் சோதனை நடைபெற்று வருகிறது.

கேரளாவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் பெலிவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதாக கூறி வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கான நன்கொடைகளைப் பெறுகிறது. அந்த பணம் ஹவாலா முறையில் கைமாறியதாகவும், வரி விலக்கு உள்ள நிதியை சட்டவிரோதமாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாகவும் சர்ச் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அந்த சர்ச் குழுமத்தின் 30 அறக்கட்டளைகளுக்கு வெளிநாட்டிலிருந்து சுமார் 6,000 கோடி ரூபாய் நிதி வந்ததாகவும், அதில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த ரெய்டு நடந்தேறியுள்ளது.

தமிழகத்தில் 3 இடங்களிலும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பிலிவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்சுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், குடியிருப்புகள் என்று 63 இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 6 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஏற்கனவே 2008'ம் ஆண்டே பெலிவர்ஸ் சர்ச் 18 ஆண்டுகளில் ரூ.1000 கோடிக்கும் மேல் வெளிநாட்டு நிதியைப் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதன்பிறகு, 2017 -ம் ஆண்டில் அதை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்ததோடு அத்துடன் தொடர்புடைய மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியைப் பெறவும் தடை விதித்திருந்தது. இந்த தடையையும் மீறி தற்பொழுது மீண்டும் முறைகேடுகளில் அந்த சர்ச் நிர்வாகம் ஈடுபடுவது அம்பலமாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News