Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்குச்சீட்டையே அபேஸ் பண்ண பாதிரியார் : தென்னிந்திய திருச்சபையின் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் முறைகேடு !

தென்னிந்திய திருச்சபையின் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் முறைகேடு

வாக்குச்சீட்டையே அபேஸ் பண்ண பாதிரியார் : தென்னிந்திய திருச்சபையின் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் முறைகேடு !

MuruganandhamBy : Muruganandham

  |  24 Oct 2021 2:21 AM GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் தேவாலயத்தில் நடைபெற்ற தேர்தலிலும் முறைகேடு நடந்தது அம்பலமாகியுள்ளது.

நாசரேத் திருமண்டல பெருமன்ற நிர்வாகிகளுக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் பாதிரியார் ஒருவர் வாக்குச்சீட்டுக்களை எடுத்துச் சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் மூன்று வாக்கு வித்தியாசத்தில் வென்றவரின் வெற்றி செல்லாது என்று அறிவித்த பிஷப், தேர்தலையும் ரத்து செய்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பல்வேறு குற்றச்சாட்டுகள், போராட்டம் என பல சிக்கல்களை சந்தித்து வந்தது தென்னிந்திய திருச்சபையின் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம். இதையெல்லாம் மீறி தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர். அப்படித் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்து பெருமன்ற நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலும் அண்மையில் நடந்தது.

TSFபெருமன்ற நிர்வாகிகள் ஒரு அணியாகவும், TSK பெருமன்ற நிர்வாகிகள் மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தனர். இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 20 ஆம் தேதி நடந்தது.வாக்கு எண்ணிக்கையின் முடிவில் டி.எஸ்.எப் அணியைச் சேர்ந்தவர்கள் 3 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது டி.எஸ்.அப் அணியின் ஆதரவாளரான பண்டாரவிளையைச் சேர்ந்த பாதிரியார் தாவீது என்பவர் TSK அணிக்கு விழுந்த வாக்குச் சீட்டுக்களை தனியாக எடுத்துச்சென்றதாக வீடியோ ஆதாரத்துடன் பிஷப்பிடம் புகார் அளித்தனர்.

வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த பிஷப், முறைகேடு நடந்திருப்பதாக சுட்டிக்காட்டி தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் பதவியேற்ற TSFஅணி நிர்வாகிகளின் வெற்றி செல்லாது என்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News