என்னடா இது கந்தனுக்கு வந்த சோதனை? 'முருகன் முகம் என்றாலே இனி சீமான் முகம்தான் ஞாபகம் வருமாம்' - சொல்கிறார் சீமான்.!
என்னடா இது கந்தனுக்கு வந்த சோதனை? 'முருகன் முகம் என்றாலே இனி சீமான் முகம்தான் ஞாபகம் வருமாம்' - சொல்கிறார் சீமான்.!
By : Kathir Webdesk
அள்ளி விடுவது, அளந்து விடுவது என்றால் அது தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சி சீமான்'தான். யாரும் கவனித்து கேட்கவில்லை என்ற மிதப்பில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த நிமிடத்தில் என்ன தோன்றுகிறதோ அதை பேசிவிடுவார். தான் ஒரு கட்சியை நடத்துகிறோம், அதனை நம்பி நான்கு பேர் சுற்றி கொண்டிருக்கின்றனர் என்ற ஒரு நினைப்பு கொஞ்சம் கூட இந்த சீமானுக்கு கிடையாது. இதில் தன்னை தமிழன் என கூறிக்கொண்டு தமிழனை அசிங்கப்படுத்துவது, 'நாம் தமிழர்' என கட்சியின் பெயரை வைத்துக்கொண்டு தமிழர் வரலாற்றை இழிவுபடுத்துவது. இவை இரண்டும் சீமானின் அரசியல் செய்கைகள்.
ஏற்கனவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மாயோன் என கூறி அவரின் ஒவியத்தை மாற்றினார். முருகன் எனக்கூறி நிலைகுத்திய விழிகளுடன் கிட்டதட்ட கிருஸ்துவ கடவுள் ஏசு போலவே மாற்றி மெழுகுதிரி ஏற்றி வழிபட்டார். மேலும் இவரின் இலங்கை கதை உலகறியும். இன்று பிரபாகரன் ஆதரவாளர்கள் அவர் இறந்ததற்கு வருத்தப்பட்டதை விட இந்த சீமான் அவரின் கதைகளை அவிழ்த்துவிடும்போது இன்னும் அதிகம் வருந்தியிருப்பர்.
சமீபத்தில் கூட மறைந்த பாடகர் திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் சீமானிடம் இலங்கை செல்லும் முன் "தம்பி இலங்கை போய்ட்டு வரட்டுமா?" என கேட்டதாக அள்ளி விட்டவர். தற்பொழுது இன்னொரு விஷயத்தை கூறி இந்து சமுதாய மக்களை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
பா.ஜ.க இப்போது தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து பேசியுள்ளது, "முப்பாட்டன் முருகன் என நான் வேல் தூக்கியபோது என்னை கேலி செய்தார்கள்.
முருகன் பிறந்தநாளுக்கு விடுமுறை கேட்டபோது எனக்கு ஆதரவாக யாருமே வரவில்லை. இப்போது பா.ஜ.க பல பிரச்னைகளை மறைக்க வேல் யாத்திரை செல்கிறது. மக்கள் பிரச்னைக்காக பா.ஜ.க நிற்காது. ஏனென்றால் பிரச்னையே பா.ஜ.க'வால்தான்" என காமெடியாக கூறிய பிறகு அவர் கூறிய அடுத்த வார்த்தைகள் ஆகச்சிறந்த காமெடி, "என்னதான் பா.ஜ.க வேல் வைத்துக்கொண்டு அரோகரா போட்டாலும், முருகா என்றால் மக்களுக்கு சீமான் முகமே ஞாபகம் வரும்" என கூறியதே அது.
மனிதனின் மனநிலை பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் அது இயல்பு, சீமானுக்கு மட்டும் வார்த்தைகள் அறிவாளித்தனமாகவா வெளிப்படும்?