Kathir News
Begin typing your search above and press return to search.

சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம்.. பள்ளிக்கல்வித்துறை.!

சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம்.. பள்ளிக்கல்வித்துறை.!

சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம்.. பள்ளிக்கல்வித்துறை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Feb 2021 9:02 AM GMT

கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பின்னர் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றிறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 9 மற்றும் 11ம் வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கோள்காட்டி பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வகுப்பறைகளில் தனிநபர் இடைவெளியை பின்பற்றும்போது ஏற்படும் இடப்பற்றாக்குறையைப் போக்குவதற்கு, ஆய்வகம், நூலகம், கூட்ட அரங்கம் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், வகுப்புகளின் எண்ணிக்கை இருமடங்காக உயரும்போது, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடத்தலாம் என்றும் தேவைப்படும் பட்சத்தில் வகுப்புகளை இரண்டு வேளைகளாக நடத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது போன்று சுழற்சி முறையில் வகுப்புகளை நடைபெறும் பட்சத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும். இரண்டு வேளைகளாக வகுப்புகள் நடைபெறும்போது மாணவர்களின் எண்ணிக்கை பிரியும், இதனால் தனிநபர் இடைவெளி கடைப்பிடித்து மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News