மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள்: அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு.!
மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள்: அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு.!

இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது பற்றி பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பி.டெக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரையிலும், 2ம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரையிலும், 3ம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி முதல் 23ம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், எம்.இ. எம்.டெக், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி. முதலாமாண்டு மாணவர்களுக்கு மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை வகுப்புகள் நடத்த அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் அனுமதி வழங்கியுள்ளார். இந்த அறிவிப்புகளை மாணவர்கள் பின்பற்றி நடக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.