Kathir News
Begin typing your search above and press return to search.

யுகாதியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.!

தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் தங்கள் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணி காத்திடும் அதேவேளையில் பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களோடு இரண்டற கலந்து, சகோதர, சகோதரிகளாய் ஒற்றுமையாய் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

யுகாதியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.!
X

ThangaveluBy : Thangavelu

  |  13 April 2021 9:31 AM IST

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுகின்ற மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி யுகாதி பண்டிகை தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: புத்தாண்டு திருநாளாம் 'யுகாதி' திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய 'யுகாதி' திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.




பேசுகின்ற மொழி வேறாய் இருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வோடு, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் தங்கள் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணி காத்திடும் அதேவேளையில் பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களோடு இரண்டற கலந்து, சகோதர, சகோதரிகளாய் ஒற்றுமையாய் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இந்த புத்தாண்டு, உங்கள் அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News