மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கப்பட்ட பேருந்து நிலையங்கள் திறப்பு!
மத்திய அரசு கொண்டு வந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்ட நெல்லை, பாளையங்கோட்டை, தஞ்சசை, திருவையாறு, மதுரை உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்கப்பட்டது.
By : Thangavelu
மத்திய அரசு கொண்டு வந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்ட நெல்லை, பாளையங்கோட்டை, தஞ்சசை, திருவையாறு, மதுரை உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்கப்பட்டது. நெல்லை பேருந்து நிலையத்தின் பணிகள் மொத்தம் 110 கோடி மதிப்பில் முடிவடைந்தது. தஞ்சை பழைய பேருந்து நிலையம் 14.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருவையாறு பேருந்து நிலையம் வணிக வளாகம், 14.44 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ளது.
மேலும், மதுரை பேருந்து நிலையம் 12.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதில் நெல்லையை பொறுத்த வரையில் அங்கு புதிய பேருந்து நிலைய விரிவாக்கம் மற்றும் பாளையங்கோட்டை பேருந்து நிலையம், சந்திப்பு ரயில் நிலையம் அருகே 3 அடுக்குகளைக் கொண்ட 2 சக்கர வாகன நிறுத்துமிடம், பூங்கா உள்ளிட்டவைகள் 110.19 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சை மாநகராட்சியில் மட்டும் ரூ.1,289 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தஞ்சை பழைய பேருந்து நிலையம், ராஜப்பா பூங்கா, காமராஜர் சரபோஜி மார்க்கெட், ஐயன் குளம், சாமந்தன் குளம் உள்ளிட்ட 16 இடங்களில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பல்வேறு கட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றது. அதுதான் தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மதுரையில் கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் மத்திய அரசு நிதியுதவியுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் பெரியார் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source,Image Courtesy: Puthiyathalamurai