Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்குவது எப்போது.. ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர்.!

தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் இயக்குவது பற்றி போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்குவது எப்போது.. ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 Jun 2021 1:02 PM IST

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மாதம் 10ம் தேதி முதல் பொதுபோக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.





இதனிடையே தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் திறப்பு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்றும் தொழிற்சாலைகள் இயங்க தொடங்கியுள்ளது. இந்த சமயத்தில் போக்குவரத்து இல்லாமல் இருசக்கர வாகனங்களில் தொழிற்சாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அரசு பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





இந்நிலையில், தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் இயக்குவது பற்றி போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News