Begin typing your search above and press return to search.
17ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஸ்டாலின்.. டெல்லி சிறப்பு பிரதிநிதி தகவல்.!
பிரதமர் மோடியை வருகின்ற 17-ம் தேதி காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By : Thangavelu
பிரதமர் மோடியை வருகின்ற 17-ம் தேதி காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநீதி ஏ.கே.எஸ். விஜயன் தமிழக அரசின் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதன் பின்னர் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாக: பிரதமர் மோடியை வருகின்ற 17ம் தேதி காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின்போது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை வைக்க உள்ளார். ஆக்சிஜன் பற்றாக்குறை, கருப்பு பூஞ்சைக்கான மருந்து உள்ளிட்டவையும் பேசுகிறார். மேலும், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி¬யும் சந்திக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
