கோவையில் அதிகரிக்கும் கொரோனா: கொடிசியா வர்த்தக மையத்தை தயார் செய்யும் ஊழியர்கள்.!
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முககவசம் அணியாதவர்கள் மற்றும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து வருகிறது.
By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்று 2ம் அலை நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மீண்டும் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழியும் காட்சிகளை பார்த்து வருகிறோம்.
மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தினசரி பாதிப்புகளாக 5 ஆயிரத்தை கடந்து செல்கிறது. இதனால் மருத்துவமனைகளில் போதுமான இடவசதி இல்லாதபோகும் பட்சத்தில், கல்லூரி வளாகம் மற்றும் முக்கிய கட்டடங்களில் கொரோனா மருத்துவமனைகளாக மீண்டும் உருவெடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னைக்கு அடுத்த படியாக கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முககவசம் அணியாதவர்கள் மற்றும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து வருகிறது.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வந்ததால், கோவை கொடிசியா வர்த்தக மையத்தின் ஒரு பகுதி சிகிச்சை மையாக மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியிருப்பதால், கொடிசியா மையத்தின் ஹால் டி, கொரோனா சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு பகுதிகள் கொரோனா சிகிச்சை மையாக மாற்றப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை 3,059 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.