Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த காண்ட்ராக்ட் வரை அடித்துச் சொல்லும் அண்ணாமலை : ஊழல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு கோவம் ஏன்?

டான்ஜெட்கோவில் 1.59 லட்சம் கோடி கடனுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதே காரணம்

அடுத்த காண்ட்ராக்ட் வரை அடித்துச் சொல்லும் அண்ணாமலை : ஊழல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இவ்வளவு கோவம் ஏன்?

MuruganandhamBy : Muruganandham

  |  23 Oct 2021 3:26 AM GMT

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 1.59 லட்சம் கோடி கடனில் இருப்பதற்கு காரணம், தனியாரிடம் மின் கொள்முதல் செய்யப்பட்டதில் துவங்கி பல்வேறு ஊழல்கள் தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர், மின்வாரியத்தில் பி.ஜி.ஆர் என்ற நிறுவனத்திற்கு அடுத்து கான்டிராக்ட் கொடுக்க இருக்கின்றனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. சிறிது நாளில் கான்டிராக்ட் அந்த நிறுவனத்தற்கு வழங்கப்பட இருக்கிறது. செந்தில் பாலாஜி போக்குவரத்து ஊழல், வேலை வாங்கி தருவதாக ஊழல், மணல் ஊழல் என செய்து பழக்கப்பட்டு, இப்போது மின்வாரிய ஊழல் என அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார். நிச்சயமாக செந்தில் பாலாஜியை பதில் சொல்ல வைப்போம்.

திமுக எம்.பி. வில்சன் பி.ஜி.ஆர் எனர்ஜிக்கு நீதிமன்றத்தில் எதற்கு ஆஜராகின்றார்? ஒரு புறம் மின்வாரியம் ஆஜராகின்றது, மறுபுறம் திமுக எம்.பி வில்சன் வழக்கறிஞராக ஆஜராகின்றார்.

பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனத்தை யார் வாங்க போகின்றார்? அதற்காகத்தான் கோபாலபுரம் என சமூகவலைதளங்களில் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார். பாஜக இதை சும்மா விடமாட்டோம், செந்தில் பாலாஜி வாயில் இருந்து பதில் வர வைப்போம்.

தூத்துக்குடி சிபிசிஐடி எஸ்.பி மின்வாரிய கான்டிராக்டர்களிடம் நேரில் விசாரணை நடத்தி இருக்கின்றார். முதல்வர் செந்தில் பாலாஜி விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்கிறார். தினமும் ஒவ்வொரு விவகாரமாக வெளியிடுவோம் என்றார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News