காஞ்சிபுரத்தில் ஊழியர் கொலை: கோவை மண்டலத்தில் 800 டாஸ்மாக் கடைகளை மூடி ஆர்ப்பாட்டம்!
காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் ஊழியர் கொல்லப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலையுடன் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோவை மண்டலத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
By : Thangavelu

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் கடந்த 4ம் தேதி இரவு டாஸ்மாக் கடையில் விற்பனை முடிந்த பின்னர் வீட்டுக்கு புறப்பட்டு சென்ற விற்பனையாளர்கள் ராமு மற்றும் துளசிதாஸ் ஆகிய இருவர் மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மண்டலத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். வரும் காலங்களில் மாநிலம் முழுவதும் சம்பவங்கள் நடைபெறாமல் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த டாஸ்மாக் பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
Source, Image Courtesy: Puthiyathalaimurai
https://www.puthiyathalaimurai.com/newsview/117895/Coimbatore-liqour-shop-Employees-protest-by-closing-800--Tasmac-stores-following-employee-murder