Kathir News
Begin typing your search above and press return to search.

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை மாணவர்: இந்தியா திரும்ப சம்மதம்!

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை மாணவர்: இந்தியா திரும்ப சம்மதம்!

ThangaveluBy : Thangavelu

  |  12 March 2022 12:37 PM GMT

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தனது மகன் இந்தியாவிற்கு திரும்புவதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக கோவை இளைஞரின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், துடியலூரை அருகே உள்ள சுப்பிரமணியம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் சாய்நிகேஷ் உக்ரைனுக்கு விமானவியல் படிப்பதற்காக சென்றிருந்தார்.

இதனிடையே கடந்த மாதம் மார்ச் 24ம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள இந்தியர்களை மத்திய அரசு பாதுகாப்பாக மீட்டது. ஒரு மாணவர் மட்டும் உயிரிழந்தார். அதே சமயம் கோவையை சேர்ந்த சாய்நிகேஷ் என்ற மாணவர் மட்டும் நாடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் உக்ரைன் ராணுவத்தில் இணைந்திருப்பதாகவும், ரஷ்ய படையை எதிர்த்து போரிடுவேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மத்திய, மாநில அரசுக்கு நடந்த சம்பவத்தை பெற்றோர்கள் தெரிவித்தனர். உடனடியாக மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் பின்னர் மீண்டும் மாணவரிடம் தொடர்பு கொண்ட பெற்றோர்கள், போர் சமயத்தில் அங்கு இருப்பது நல்லது இல்லை, உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஒரு வழியாக நாடு திரும்ப மாணவர் சாய் நிகேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். இது பற்றி இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மாணவர் இந்தியா திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source, Image Courtesy: One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News