Kathir News
Begin typing your search above and press return to search.

தென்மேற்கு பருவக்காற்று.. 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

ஜூன் மாதம் தொடக்கத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவக்காற்று தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் இதர இடங்களில் வறண்ட நிலையும் ஏற்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று.. 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  15 Jun 2021 2:56 PM IST

ஜூன் மாதம் தொடக்கத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவக்காற்று தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் இதர இடங்களில் வறண்ட நிலையும் ஏற்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ளது. மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு நாட்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதே போன்று சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News