நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக முகநூலில் பதிவு: கோவை இளைஞரை கைது செய்த தி.மு.க அரசு!
By : Thangavelu
பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் பற்றி சில கருத்துக்களை கூறியதால் முஸ்லீம்கள் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். இதில் சில இடங்களில் வன்முறையாகவும் மாறியது. அதே சமயம் நுபுர் ஷர்மாவுக்கு இந்துக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.
நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றனர். நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதற்காக நுபுர் ஷர்மாவை பா.ஜ.க. இடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டது. இதன் பின்னரும் முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிலர் நுபுர் ஷர்மாவை கொலை செய்து விடுவோம் எனவும் பேசி வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டம் சென்னனூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி 24, என்ற இளைஞர் தனது முகநூல் பதிவில் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார். அவரது கருத்து இரண்டு தரப்புக்கும் இடையில் பகை உணர்வை ஏற்படுத்தும்விதமாக இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ஐடி சட்டம் மற்றும் பகை உணர்வை தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இவரது கைதுக்கு பா.ஜ.க. மற்றும் வலதுசாரி அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Vikatan