உக்ரைன் ராணுவத்தில் கோவை வாலிபர்: விசாரணையில் இறங்கிய உளவுத்துறை!
By : Thangavelu
உக்ரைன் நாட்டிற்கு படிக்க சென்ற கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்நாட்டின் துணை ராணுவத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலால் அங்குள்ள இந்திய மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கோவையை சேர்ந்த மாணவர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை, கவுண்டம்பாளையம் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரின் மகன் சாய்நிகேஷ் உக்ரைனில் படிப்பதற்காக சென்றிருந்தார். இவருக்கு சிறுவயது முதலே ராணுவத்தில் சேரவேண்டும் என்பது ஆசையாம். இதனால் இந்திய ராணுவத்தில் சேருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இவர் உயர் சற்று குறைவாக இருந்ததால் ராணுவத்தில் சேரும் கனவு நிறைவேறவில்லை.
இதற்கிடையில் உக்ரைனில் சாய் நிகேஷ் ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயரிங் படிக்க சென்றார். அதற்காக கடந்த 2019ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் தலைநகரில் அமைந்துள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கத்தொடங்கினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவிற்கு வந்து சென்ற சாய் நிகேஷ் மீண்டும் தனது பெற்றோர்களிடம் தொலைபேசியில் மட்டும் பேசி வந்துள்ளார். இதற்கிடையில் ரஷ்யா, உக்ரைன் போர் விவகாரத்தால் தனது மகனுடன் பெற்றோர் பேசியபோது சாய் நிகேஷ் இந்தியா வரமறுத்துள்ளார். நான் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துள்ளேன். அங்கு ரஷ்யாவுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது என்று கூறி தொலைபேசி அலைப்பை துண்டித்துள்ளார்.
இது பற்றி கேள்விப்பட்ட சாய்நிகேஷ் பெற்றோர் உனடியாக மத்திய, மாநில அரசுகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மாணவர் சாய் நிகேஷ் எப்போது உக்ரைன் சென்றார் அது பற்றிய விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Source, Image Courtesy: Maalaimalar