தமிழகம் முழுவதும் இன்று கல்லூரி திறப்பு.. காவல் இணை ஆணையர் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு.!
தமிழகம் முழுவதும் இன்று கல்லூரி திறப்பு.. காவல் இணை ஆணையர் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு.!
By : Kathir Webdesk
தமிழகம் முழுவதும் இன்று கல்லூரி திறக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாநிலம் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் அனைவரும் குதூகலமாக கல்லூரிக்கு வருவார்கள். அப்படி வரும்போது சிலர் அட்டகாசத்திலும் ஈடுபட வாய்ப்பு.
சென்னையில்தான் ரூட்டு தல என்ற போர்வையில் மாணவர்கள் அட்டகாசம் செய்வார்கள். அப்படி செய்யும் மாணவர்களுக்கு சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை வீடியோ ஒன்றை விடுத்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக பல மாதங்கள் கழித்து கல்லூரி திறக்கப்பட உள்ள நிலையில் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் கல்லூரிக்கு வரும் போதும், போகும் போதும் பேருந்துகளின் மேற்கூரைகளில் அமர்ந்து பயணம் செய்வது, படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்த்து பொதுமக்களுக்கு இன்னல் தராத வகையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக மாணவர்கள் மற்றும் மாணவர்கள் பெயரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்வர் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, ‘ரூட்டு தல’ பிரச்சனைகளில் ஈடுபடக்கூடாது எனவும் மீறினால் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அவர் எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.