Kathir News
Begin typing your search above and press return to search.

நிலத்தை அபகரிக்க குடும்பத்திற்கே கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க ஒன்றிய செயலாளர்!

கொலை மிரட்டல் விடுத்து தங்களுடைய நிலத்தை அபகரிக்க முயன்றதாக திமுக ஒன்றிய செயலாளர் மீது குடும்பமே சேர்ந்து புகார் அளித்துள்ளது.

நிலத்தை அபகரிக்க குடும்பத்திற்கே கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க ஒன்றிய செயலாளர்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Dec 2022 3:45 AM GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த அருள், சரவணன், அசோக்குமார், அருண்குமார் ஆகிய நால்வரும் தங்கள் வீட்டு பெண்களுடன் வேலூர் எஸ்.பி அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் ஒன்று அளித்து இருக்கிறார்கள். குறிப்பாக அதில் தங்களுடைய தந்தையும் எங்கள் சித்தப்பாவும் கூட்டாக சேர்ந்து 1994 ஆம் ஆண்டு ஏரிபுதூர் கிராமத்தில் சுமார் 7.45 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தனர்.


அந்த நிலத்தை இத்தனை ஆண்டு காலமாக தாங்கள்தான் அனுபவித்து வருவதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் தி.மு.கவின் அணைக்கட்டு மத்தியில் ஒன்றிய செயலாளர் ஆன எரிபுதூர் வெங்கடேசன் என்பவர் எங்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து மண் அள்ளி விற்பனை செய்கிறார். இது குறித்து கேட்டதற்கு எங்கள் குடும்பத்தினரை அடித்து தாக்கினார். கொலை மிரட்டல் விடுதி இருக்கிறார். உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் எங்களுடைய குடும்பத்தில் இருந்தால் அதற்கு அவர் தான் முழுக்க முழுக்க காரணம் என்றும் கூறியிருக்கிறார்கள்.


இது பற்றி தி.மு.க ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் விளக்கம் தருகையில், இத்தனை ஆண்டு காலமாக அந்த குடும்பம் பயன்படுத்தி வந்த நிலம் எங்களுடைய பூர்விக நிலம். என் பெரியப்பாவிற்கு சொந்தமானது என்று இவர் கூறியிருக்கிறார். அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். 1993 ஆம் ஆண்டிலேயே அவரது வாரிசுகளை எங்களது பெயரில் அந்த நிலத்தை உயிர் எழுதி வைத்துவிட்டார். எங்களுக்கு தெரியாமலேயே திருட்டுத்தனமாக எதிர் தரப்பினர் பத்திர பதிவு செய்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக அந்த உயில் மாயமாகிவிட்டது. இதனால் எங்கள் பழைய வீட்டை இப்போது இடிக்கும் பொழுது அந்த உயில் இப்பொழுது தான் தங்கள் கைக்கு கிடைத்தது. அதனால் தான் எதிர்த்தரப்பினரை காலி செய்யுமாறு கூறினார். மேலும் கொலை மிரட்டல்,தாக்குதல் போன்ற எந்த ஒரு வார்த்தையும் பயன்படுத்தவில்லை. என் மீது பொய் குற்றச்சாட்டை வைக்கிறார்கள் என்று அவர் தரப்பில் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Vikatan News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News